கர்நாடக மது பாக்கெட்டுகள் பொக்லைன் எந்திரம் மூலம் அழிப்பு

ஓசூர் அருகே சானமாவு வனப்பகுதியில் மதுவிலக்கு பிரிவு போலீசார் கர்நாடக மது பாக்கெட்டுகள் பொக்லைன் எந்திரம் மூலம் அழித்தனர்.

Update: 2023-02-28 18:45 GMT

ஓசூர்

ஓசூர் அருகே சானமாவு வனப்பகுதியில் மதுவிலக்கு பிரிவு போலீசார் கர்நாடக மது பாக்கெட்டுகள் பொக்லைன் எந்திரம் மூலம் அழித்தனர்.

போலீஸ் சூப்பிரண்டு உத்தரவு

கர்நாடக மாநிலத்தில் இருந்து அதிக அளவில் மதுபாட்டில்கள், மது பாக்கெட்டுகள் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடத்தப்பட்டு வந்தன. இதை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர் போலீசாருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் மாநில எல்லை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தீவிர சோதனை நடத்தினர்.

அப்போது கர்நாடக மதுபாட்டில்கள், மது பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் பறிமுதல் செய்யப்பட்ட கர்நாடக மதுபான பாக்கெட்டுகளை அழிக்க மதுவிலக்கு பிரிவு போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர். அதன்படி ஓசூர் அருகே சானமாவு பகுதியில் மினி வேன் மூலம் கொண்டு வரப்பட்டன.

மது பாக்கெட்டுகள் அழிப்பு

இதையடுத்து கர்நாடக மது பாக்கெட்டுகள், மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் மற்றும் சானமாவு கிராம நிர்வாக அலுவலர் வெண்மதி ஆகியோர் முன்னிலையில் பொக்லைன் எந்திரம் மூலம் உடைத்து அழித்தனர். பின்னர் அவற்றை குழி தோண்டியும், அதில் மதுபானங்களை கொட்டியும் புதைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்