மதுவினால் இளைஞர்களின் வாழ்க்கை சீரழிந்து வருகிறது

மதுவினால் இளைஞர்களின் வாழ்க்கை சீரழிந்து வருகிறது என பிரேமலதா விஜயகாந்த் குற்றம் சாட்டினார்.

Update: 2023-09-15 19:15 GMT

அருப்புக்கோட்டை, 

மதுவினால் இளைஞர்களின் வாழ்க்கை சீரழிந்து வருகிறது என பிரேமலதா விஜயகாந்த் குற்றம் சாட்டினார்.

பூர்வீக வீடு

அருப்புக்கோட்டை அருகே உள்ள ராமானுஜபுரத்திற்கு தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் வந்தார். அப்போது அவர் விஜயகாந்த் வாழ்ந்த வீடு, பூர்வீக வீடு ஆகியவற்றை பார்வையிட்டார். அதனைத்தொடர்ந்து அங்குள்ள பெருமாள் கோவிலில் அவர் தரிசனம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

கலைஞர் மகளிர் உரிமை தொைக திட்டம் காலம் கடந்து தொடங்கப்பட்டுள்ளது. பால், நெய், மின் கட்டணம், வீட்டு வரி என அனைத்தும் உயர்ந்து விட்டது. மக்களுக்கு கொடுப்பது போல் கொடுத்துவிட்டு மறுபக்கம் மறைமுகமாக வசூல் செய்கிறார்கள். டாஸ்மாக் மூலமும் வசூல் செய்கிறார்கள்.

கனிமவள கொள்ளை

நாடாளுமன்ற தேர்தலுக்கு ஓட்டுக்கு காசு கொடுப்பதற்கு பதிலாக 6 மாதத்திற்கு முன் இதனை ஆரம்பித்துள்ளார்கள். சனாதனம் பற்றி உதயநிதி ஸ்டாலின் கவனமாக பேச வேண்டும்.

அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட 3-வது கட்சி தே.மு.தி.க. ஆகும். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் போது கட்சி நிலைப்பாடு குறித்து கண்டிப்பாக தெரிவிப்போம். ஆயிரக்கணக்கான டன் கனிம வளங்கள் தமிழகத்தில் இருந்து கடத்தப்படுகின்றன. தமிழகத்தில் எங்கும் தண்ணீர் இல்லை. இது மாற வேண்டுமென்றால் கனிமவள கொள்ளையை அரசு இரும்பு கரம் கொண்டு தடுக்க வேண்டும். தற்போது மதுபழக்கத்தினால் தமிழகத்தில் இளைஞர்களின் வாழ்க்கை சீரழிந்து வருகிறது. இதனை பற்றி பேசாமல் இருப்பதற்கு தான் இந்த ரூ.ஆயிரம் கொடுக்கிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்