சாராயம் ஊறல் அழிப்பு; ஒருவர் கைது
சாராயம் ஊறல் அழிப்பு; ஒருவர் கைது செய்யப்பட்டார்.
ஆலங்குடி அருகே அழகன்விடுதியில் சாராய ஊறல் போட்டு இருப்பதாக ஆலங்குடி மதுவிலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் குணமதி தலைமையிலான போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது அங்கு சாராயம் ஊறல் போட்டிருந்த மோகனூர் பகுதியை சேர்ந்த முத்துக்குமார் (வயது 37) என்பவரை கைது செய்து, சாராய ஊறல் மற்றும் 370 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்து அங்கேயே கீழே ஊற்றி அழித்தனர்.