ஆட்டோவில் கடத்திய மதுபாட்டில்கள் பறிமுதல் டிரைவர் கைது

ஆட்டோவில் கடத்திய மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடா்பாக டிரைவர் கைது செய்யப்பட்டாா்.

Update: 2023-02-04 18:45 GMT

கோட்டக்குப்பம் மதுவிலக்கு அமல்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் மரியசோபி மஞ்சுளா, சப்-இன்ஸ்பெக்டர் சிவகுருநாதன் மற்றும் போலீசார், கிளியனூர் புளிச்சப்பள்ளம் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த ஆட்டோவை போலீசார் சந்தேகத்தின்பேரில் நிறுத்தி சோதனை செய்ததில் அந்த ஆட்டோவினுள் 125 மதுபாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் ஆட்டோ டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் அவர், திண்டிவனம் அருகே மொளசூரை சேர்ந்த ஆனந்தபாபு (வயது 30) என்பதும், புதுச்சேரியில் இருந்து மதுபாட்டில்களை கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து ஆனந்தபாபுவை போலீசார் கைது செய்து அவரிடமிருந்த மதுபாட்டில்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்