மதுபாட்டில்கள் பதுக்கி விற்ற 21 பேர் கைது

சேலம் மாநகரில் மதுபாட்டில்கள் பதுக்கி விற்ற 21 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-05-12 20:16 GMT

சேலம் மாநகர பகுதியில் சந்து கடைகளில் டாஸ்மாக் மதுபாட்டில்களை சிலர் பதுக்கி வைத்து, கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருகிறார்கள். கிச்சிப்பாளையம் உள்ளிட்ட சில இடங்களில் விடிய, விடிய மது விற்பனை ஜோராக நடந்து வருவதாகவும் புகார் எழுந்தது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி உத்தரவிட்டார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் மாநகரம் முழுவதும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, சூரமங்கலத்தில் முனியம்மாள் (வயது81), கருப்பூரில் சிவா (46), மாதேஷ் (65), கொண்டலாம்பட்டியில் செல்வராஜ் (53) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அதேபோல், அன்னதானப்பட்டி, செவ்வாய்பேட்டையில் தலா 6 பேர், டவுன் பகுதியில் 5 பேர் என மொத்தம் 21 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 100-க்கும் மேற்பட்ட மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்