வரி செலுத்தாவிட்டால் குடிநீர் இணைப்பு துண்டிப்பு- ஆணையர்

வேதாரண்யம் நகராட்சியில் வரி செலுத்தாவிட்டால் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் என ஆணையர் ஹேமலதா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2022-11-19 19:15 GMT

வேதாரண்யம் நகராட்சியில் வரி செலுத்தாவிட்டால் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் என ஆணையர் ஹேமலதா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நகராட்சி வரி

வேதாரண்யம் நகராட்சியில் 2022-2023-ம் ஆண்டு செலுத்த வேண்டிய சொத்து வரி, தொழில்வரி, குடிநீர் கட்டணம், கடை வாடகை மற்றும் தொழில் உரிமை கட்டணம் ஆகியவற்றை நகராட்சியில் வருகிற 30-ந் தேதிக்குள் செலுத்த வேண்டும்.

வேதாரண்யம் நகராட்சி பகுதியில் பொதுமக்களுக்கு தேவையான குடிநீர் வசதி, தெரு விளக்கு, பொது சுகாதார வசதிகள் நகராட்சியால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நகராட்சியில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்வதற்கு வசதியாக நிலுவையில் உள்ள வரித் தொகையினை அலுவலகத்தில் செலுத்த வேண்டும்.

குடிநீர் இணைப்பு துண்டிப்பு

வரிகளை செலுத்தவில்லை என்றால் பாக்கி வைத்துள்ளவரின் பெயர்கள் பொது இடத்தில் பார்வைக்கு வைக்கப்படும். வரி செலுத்தாதவர்களின் குடிநீர் இணைப்புகள் உடனடியாக துண்டிக்கப்படும். மேலும் ஜப்தி மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகள் நகராட்சி நிர்வாகத்தினரால் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்