ஆலாங்குப்பம் அரசு பள்ளி மாணவிகள் தேர்வு

மாநில அளவிலான கலை போட்டிக்கு ஆலாங்குப்பம் அரசு பள்ளி மாணவிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

Update: 2022-12-18 16:24 GMT

திருப்பத்தூர் மாவட்ட அளவிலான கலைத்திருவிழா போட்டி திருப்பத்தூரில் நடந்தது. இதில் மாதனூர் ஒன்றியம் ஆலாங்குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் 2 போட்டிகளில் முதலிடமும், 1 போட்டியில் இரண்டாம் இடம் பிடித்து வெற்றி பெற்றனர். தனி நபர் நடிப்பு போட்டியில் போதனா முதலிடமும், கதை சொல்லுதல் போட்டியில் அபிநயா முதலிடமும், கவிதை புனைதல் போட்டியில் ஹரினி இரண்டாம் இடம் பிடித்துள்ளார். இதில் முதலிடம் பிடித்த 2 மாணவிகள் மதுரையில் நடைபெறும் போட்டியில் பங்கு பெற உள்ளனர். வெற்றி பெற்ற மாணவிகளை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் மதன்குமார், பள்ளி தலைமை ஆசிரியர் மகேஸ்வரி, ஆசிரியர்கள் சரஸ்வதி. ரெஹானா பர்வின், புவனேஸ்வரி ஆகியோர் பாராட்டினர். மேலும் வெற்றி பெற்ற மாணவிகளுக்கும், வெற்றிக்கு பாடுபட்ட ஆசிரியர்களுக்கும் பொன்னி கப்பல்துரை, பள்ளி மேலாண்மைகுழு நிர்வாகிகள் பாராட்டு தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்