ஆலங்குடி அரசு மருத்துவமனையில் தீ விபத்து

ஆலங்குடி அரசு மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டது.

Update: 2023-06-12 17:52 GMT

ஆலங்குடி அரசு மருத்துவமனையில், அமைச்சர் மெய்யநாதன் நிதியில் ரூ.1 கோடியில் தீவிர சிகிச்சை பிரிவு அமைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த பிரிவில் மின்சாரம் சீராக இல்லை என்றும், அதனை சீரமைத்து தருமாறும் மருத்துவமனை நிர்வாகம் சார்பில், பலமுறை மின்சார வாரியத்தில் புகார் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், முறையான பராமரிப்பு இல்லாததால் திடீரென ஐ.சி.யு வார்டில் உயர் மின்னழுத்தம் காரணமாக தீப்பிடித்தது. இதனால் அதிர்ச்சியடைந்த மருத்துவமனை ஊழியர்கள் சிகிச்சைக்காக அங்கிருந்த 2 நோயாளிகளை உடனடியாக அப்புறப்படுத்தினர். இதையடுத்து அங்கிருந்தவர்கள் தீயை உடனடியாக அணைத்தனர். இதனால் பெரும் பாதிப்பு ஏற்படவில்லை. அரசு மருத்துவமனையில் தீப்பிடித்த சம்பவம் அறிந்த அங்கிருந்தவர்கள் மருத்துவமனையில் இருந்து வெளியேறியதால் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பொதுமக்கள் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனையில் முறையான மின்சாரம் கிடைக்க சம்பந்தப்பட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்