வெண்பட்டு உடுத்தி ஆற்றில் இறங்கிய அழகர்
சிவகங்கையை அடுத்த நாட்டரசன்கோட்டையில் சிவகங்கை சமஸ்தானம், தேவஸ்தானத்திற்கு சொந்தமான பிரசன்ன வெங்கடாஜலபதி பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சித்திரை திருவிழா நடைபெற்றது.
சிவகங்கையை அடுத்த நாட்டரசன்கோட்டையில் சிவகங்கை சமஸ்தானம், தேவஸ்தானத்திற்கு சொந்தமான பிரசன்ன வெங்கடாஜலபதி பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 1-ந்தேதி தொடங்கியது. நேற்று முன்தினம் காப்புகட்டுதல் நிகழ்ச்சியும், நேற்று காலை கோவிலில் இருந்து வெள்ளிக்குதிரையில் புறப்பட்ட அழகர் பல்வேறு இடங்களில் காட்சி தரும் நிகழ்ச்சியும் நடந்தது. நேற்று பகல் 1 மணிக்கு ஆயிரக்கணக்கான பக்தர்களின் ஆரவாரத்துடன் வெண்பட்டு உடுத்தி அழகர் பூவாளம் ஆற்றில் இறங்கினார். இரவு 9 மணி முதல் தசாவதார நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து கோவில்கள் மற்றும் மண்டபங்களில் அழகர் காட்சி தருதல் மற்றும் தீர்த்தவாரி நிகழ்ச்சியோடு இன்று இரவு விழா நிறைவடைகிறது. ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் சிவகங்கை சமஸ்தானம், தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் ராணிமதுராந்தகி நாச்சியார் உத்திரவின் பேரில் தேவஸ்தான மேலாளர் இளங்கோ, கோவில் கண்காணிப்பளர் சரவணகணேசன், கவுரவ கண்காணிப்பாளர் முருகப்ப செட்டியார் மற்றும் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.