பள்ளி மாணவர்களுக்கு ஆக்கி பயிற்சி
குன்னூர் அருகே பள்ளி மாணவர்களுக்கு ஆக்கி பயிற்சி அளிக்கப்பட்டது.
குன்னூர்,
நீலகிரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளில் ஆக்கி விளையாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. இதற்காக சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் பள்ளி விடுமுறை நாட்களில் அருவங்காடு சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள முன்னாள் ஆக்கி வீரர்கள், முன்னாள் விளையாட்டு அலுவலர் குமார் உள்ளிட்டோர் பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி அளித்து வருகின்றனர். அருவங்காடு விளையாட்டு மைதானத்தில் ஆக்கி பயிற்சி வகுப்பு நடந்தது. மாணவர்களுக்கு ஆக்கி மட்டை, பந்து போன்ற விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டன. மேலும் ஆக்கி விளையாட உத்திகள் கற்று கொடுக்கப்பட்டது. இதில் 30-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர். பள்ளி விடுமுறை நாட்களில் விளையாட்டு பயிற்சி பெற மாணவர்கள் முன்வருவது பாராட்டை பெற்று உள்ளது.