அக்பர்அலி மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை
திருக்கோவிலூரில் அக்பர்அலி மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை அமைச்சர் பொன்முடி திறந்து வைத்தார்.
திருக்கோவிலூர்:
திருக்கோவிலூர் செவலை ரோட்டில் அனைத்து வசதிகளுடன் கூடிய அக்பர் அலி மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் டாக்டர் ஏ.அன்சாரிராஜா தலைமை தாங்கினார். விழுப்புரம் தெற்கு மாவட்ட தி.மு.க. பொருளாளர் ஜனகராஜ், கள்ளக்குறிச்சி மாவட்ட ஊராட்சிக்குழு துணை தலைவர் வக்கீல் தங்கம், தலைமை செயற்குழு உறுப்பினர் செல்வராஜ், நகர தி.மு.க. அவைத்தலைவர் டி.குணா ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் கலந்து கொண்டவர்களை மருத்துவமனையின் நிர்வாகி டாக்டர் எம்.கே.எம்.ஆயிஷாசித்திக்கா வரவேற்றார். விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
புகழேந்தி எம்.எல்.ஏ. அறுவை சிகிச்சை அரங்கத்தையும், திருக்கோவிலூர் நகர மன்ற தலைவர் டி.என்.முருகன் அவசர சிகிச்சை பிரிவையும், தொழிலதிபர் ஜெ.முருகன் லேபர் வார்டையும், டாக்டர் பால்ராஜ் ஸ்கேன் மையத்தையும், டாக்டர் பாஸ்கரன் சி.டி. ஸ்கேன் மையத்தையும் திறந்து வைத்தனர்.
விழாவில் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் மணிமேகலை, முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் தேவிமுருகன், நகர மன்ற துணை தலைவர் உமாமகேஸ்வரிகுணா, அரகண்டநல்லூர் பேரூராட்சி மன்ற தலைவர் வக்கீல் ராயல் எஸ்.அன்பு, முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் ஏ.ஆர்.வாசிம் ராஜா, தொழிலதிபர் எம்.எஸ்.கே.அக்பர், ஏ.ஆர்.அப்துல்ஹக்கீம், திருக்கோவிலூர் நகர மன்ற உறுப்பினர்கள் சாந்தபிரபாமணி, சி.ஆர்.சம்பத், ஐ.ஆர்.கோவிந்தராஜன், பைனான்சியர் அண்ணாதுரை, வக்கீல் திருச்செல்வன், நகர முக்கிய பிரமுகர்கள், அனைத்து கட்சி நிர்வாகிகள், உறவினர்கள், நண்பர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை மருத்துவமனையின் நிர்வாக அலுவலர் எம்.கே.எம்.அப்துல்ரஹீம் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் செய்திருந்தனர். முடிவில் ஏ.அப்ராஸ் துல்பிகார், ஏ.அப்ஸல்சுஹைர் ஆகியோர் நன்றி கூறினர்.