அய்யனாரப்பன் கோவில் கும்பாபிஷேகம்

மகமாயி திருமணி கிராமத்தில் அய்யனாரப்பன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

Update: 2023-02-05 16:41 GMT

திருவண்ணாமலை மாவட்டம் தேசூரை அடுத்த மகமாயி திருமணி கிராமத்தில் உள்ள குளக்கரையில் புதிதாக கட்டப்பட்ட அய்யனாரப்பன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.  இதையொட்டி யாக குண்டம் மற்றும் 108 புனிதநீர் கலசம் வைத்து சிவாசர்மா தலைமையில் 11 சர்மாக்கள் கலந்துகொண்டு கணபதி பூஜை, விக்னேஸ்வரர் பூஜை மற்றும் அய்யனாரப்பன் மூலவர் சிலை பிரதிஷ்டை செய்தனா்.

பின்னர் கோ பூஜை, கலச பூஜை, நாடி சந்தானம், விசேஷ மூல மந்திரங்கள், தம்பதி பூஜை ஆகியவை நடந்தது. பின்னர் புனிதநீர் கலசத்தை கோவிலில் மூன்று முறை சுற்றி வந்து சிவாசர்மா, மூலவருக்கும், உச்சவருக்கும் புனிதநீர் ஊற்றி கற்பூர ஆராதனை காண்பித்தார். மேலும் அங்கிருந்த பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. தொடர்ந்து மூலவருக்கும், உற்சவருக்கும் அலங்காரம் செய்து, கற்பூர ஆராதனை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

ஏற்பாடுகளை சென்னை பெருங்குடி பகுதியை சேர்ந்த மீனாட்சி என்ஜினீயரிங் ஒர்க்ஸ் சிவலிங்கம் குடும்பத்தினர் மற்றும் அய்யனாரப்பன் கோவில் திருப்பணி மன்ற விழா குழுவினர், மகமாயி திருமணி கிராம பொதுமக்கள் செய்து இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்