ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கணியம்பாடியில் ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2022-09-29 17:44 GMT

வேலூர் மாவட்டம், கன்னியம்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே வேலூர் மாவட்ட ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்கம் மற்றும் உழைக்கும் பெண்கள் அமைப்பு சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. உழைக்கும் பெண்கள் அமைப்பு மாவட்ட செயலாளர் சரோஜா தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர் மஞ்சுளா, மாவட்ட துணை தலைவர் மலர், மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர்கள் சாந்தி, கோடீஸ்வரி, சத்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஏ‌.ஐ.டி.யூ.சி. மாவட்ட செயலாளர் சிம்புதேவன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக ஏ.ஐ.டி.யூ.சி. மாநில துணைத்தலைவர் தேவதாஸ் கலந்து கொண்டு பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் கணியம்பாடி ஒன்றியத்திற்கு உட்பட்ட ரங்காபுரம், துத்திக்காடு, சின்ன பாலம்பாக்கம், அல்லிக்குட்டை ஆகிய பகுதிகளில் சாலை, தெரு விளக்கு, குடிநீர் வசதி மற்றும் அத்தியாவசிய பணிகளை உடனடியாக நிறைவேற்றக் கோரி கோஷமிட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்