ஏ.ஐ.டி.யு.சி. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

வாணியம்பாடியில் ஏ.ஐ.டி.யு.சி. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2023-07-19 18:58 GMT

தமிழகம் முழுவதும் தூய்மைப் பணிகள் அனைத்தும் தனியாருக்கு விடுவதை உடனே கைவிட வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏ.ஐ.டி.யு.சி. சுகாதார தொழிலாளர் சங்கம் சார்பில் வாணியம்பாடியில் உள்ள எல்.ஐ.சி. அலுவலகம் அருகில் நேற்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு ஏ.ஐ.டி.யு.சி. சங்க செயலாளர் ஜாகீர் உசேன் தலைமை தாங்கினார். சங்க தலைவர் பாபு முன்னிலை வகித்தார். அதில் மாவட்ட பொதுச் செயலாளர் தேவதாஸ், தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட செயலாளர் முல்லை ஆகியோர் கண்டன ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினர். அதில் பெண்கள் உள்பட 30-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் பொருளாளர் தேவராஜ் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்