ஏ.ஐ.டி.யு.சி. கொடியேற்று விழா
கழுகுமலையில் ஏ.ஐ.டி.யு.சி. கொடியேற்று விழா நடந்தது.
கழுகுமலை:
கழுகுமலையில் மே தினத்தை முன்னிட்டு ஏ.ஐ.டி.யு.சி. கட்டுமான தொழிலாளர்கள் சங்கம் சார்பில் கொடியேற்று விழா நடைபெற்றது. மாவட்ட பொருளாளர் ராமலிங்கம் தலைமை தாங்கினார். கழுகுமலை சி.பி.ஐ. நகர உதவி செயலாளர் கருப்பசாமி அங்குள்ள கொடிக்கம்பத்தில் சங்க கொடியை ஏற்றி வைத்தார்.
இதில் சி.பி.ஐ. உதவி செயலாளர் எட்டப்பன், ஏ.ஐ.டி.யு.சி. நிர்வாகிகள் மாடசாமி, ரகுராமன், தீபக், குருசாமி, மகேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதேபோல் கழுகுமலை அருகே உள்ள கரடிகுளத்தில் ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட குழு உறுப்பினர் முருகன் தலைமையில் சங்க கொடியேற்றபட்டது. இதில் நிர்வாகிகள் சிதம்பரம், சங்கரலிங்கம், கருப்பசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.