ஏ.ஐ.டி.யு.சி. சார்பில் ஆர்ப்பாட்டம்

உள்ளாட்சித்துறை பணியாளர்களுக்கு ரூ.21 ஆயிரம் சம்பளம் வழங்கக்கோரி ஏ.ஐ.டி.யு.சி. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2022-09-13 19:07 GMT

அரியலூர் அண்ணா சிலை அருகே ஏ.ஐ.டி.யு.சி. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட பொது செயலாளர் தண்டபாணி தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் தன்சிங் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு துறைகளை சார்ந்த தொழிலாளர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டம் குறித்து சங்க நிர்வாகிகள் கூறுகையில், உள்ளாட்சித்துறை, மருத்துவத்துறை, கூட்டுறவு, டாஸ்மாக், பொதுத்துறை என அனைத்து துறைகளிலும் நிரந்தரப்படுத்தாத தொழிலாளர் அனைவருக்கும் குறைந்தபட்ச ஊதியமாக மாதம் ரூ.21 ஆயிரம் வழங்க வேண்டும். மின் கட்டணம், வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி உள்ளிட்ட கட்டண உயர்வுகளை ரத்து செய்ய வேண்டும். அரசு மற்றும் தனியார் தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்களில் நிரந்தர பணியிடங்கள் நீண்ட காலமாக காண்ட்ராக்ட் மற்றும் அவுட்சோர்சிங் முறை உள்ளது. இதனை ஒழிக்க வேண்டும். போக்குவரத்து, நுகர்பொருள் வாணிபக்கழகம், மின்வாரியம், ஆவின் என அனைத்து அரசு நிறுவனங்களையும் தனியார் மயமாக்கும் முயற்சியை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்