ஏ.ஐ.டி.யு.சி. ஆர்ப்பாட்டம்

குடியாத்தத்தில் ஏ.ஐ.டி.யு.சி. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது.

Update: 2023-05-23 18:29 GMT

குடியாத்தம் பழைய பஸ் நிலையம் அருகே வேலூர் மாவட்ட ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட குழு அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம், மாணவர் பெருமன்றம், இந்திய மாதர் தேசிய சம்மேளனம், தமிழ்நாடு விவசாய தொழிலாளர்கள் சங்கம், அகில இந்திய விவசாயிகள் சங்கம், தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கங்கள் ஆகியவை சார்பில் பல்வேறு ேகாரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு எஸ்.மகேஷ்பாபு, கே.கல்பனாசந்தர் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட துணை செயலாளர் துரைசெல்வம், நகர ஒன்றிய செயலாளர் டி.ஆனந்தன், மாவட்ட நிர்வாக குழு கே.சி.பிரேம்குமார் ஆகியோர் கண்டன உரை ஆற்றினார்கள்.

ஆர்ப்பாட்டத்தில், மல்யுத்த வீராங்கனைகளிடம் பாலியல் தொந்தரவு செய்த பா.ஜ.க. எம்.பி. மீது நடவடிக்கை எடுக்காமலும், போராடுபவர்கள் மீது காவல்துறையை விட்டு தாக்குகின்ற சம்பவத்தை கண்டித்தும் மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பினர். 

Tags:    

மேலும் செய்திகள்