மத்திய அரசை கண்டித்து ஏ.ஐ.டி.யு.சி. சார்பில் ஆர்ப்பாட்டம்
ஆரணியில் மத்திய அரசை கண்டித்து ஏ.ஐ.டி.யு.சி. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆரணி
திருவண்ணாமலை மாவட்ட குழு சார்பாக மத்திய அரசை கண்டித்து ஆரணி அண்ணா சிலை அருகே ஏ.ஐ.டி.யு.சி. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட துணைத் தலைவர் குப்புரங்கன் தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள் ஏழை, எளிய மக்களை மிகவும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது, பெரிய கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆதரவாக மத்திய அரசு பட்ஜெட்டை தயாரித்துள்ளது.
ேமலும் தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்திற்கு ஒதுக்கப்படும் நிதியை குறைத்து வழங்கப்படுவதை கண்டித்தும், மத்திய அரசின் திட்டங்கள் தமிழ் நாட்டுக்கு கிடைக்காமல் இருப்பதை கண்டித்தும், விவசாயிகளை பாதிக்கும் வகையில் உரம் இடுபொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த தவறிய மத்திய அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.
இதில் மாவட்ட பொதுச் செயலாளர் மாதேஸ்வரன், தாலுகா பொறுப்பாளர் தாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.