ஏ.ஐ.டி.யு.சி. சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு ஏ.ஐ.டி.யு.சி. சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2023-04-21 18:45 GMT

தூத்துக்குடி மாவட்ட ஏ.ஐ.டி.யு.சி சங்கம் சார்பில் தூத்துக்குடி உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு கிருஷ்ணராஜ் தலைமை தாங்கினார். மாநில தலைவர் காசிவிசுவநாதன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். ஆர்ப்பாட்டத்தில் 8 மணி நேர வேலையை 12 மணி நேரமாக உயர்த்தி சட்டம் இயற்றிய தமிழக அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் ஏ.ஐ.டி.யு.சி சங்கத்தை சேர்ந்த பாலசிங்கம், சேது, சுப்பிரமணியன், அசோகன், கோட்டை நடராஜன், தனலட்சுமி, வக்கீல் முத்துலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்