ஏ.ஐ.டி.யூ.சி. பேரவை கூட்டம்
திருமருகலில் ஏ.ஐ.டி.யூ.சி. பேரவை கூட்டம் நடந்தது.
திட்டச்சேரி:
திருமருகல் தனியார் மண்டபத்தில் ஏ.ஐ.டி.யூ.சி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக சுமை தூக்கும் தொழிலாளர் சங்க ஆண்டு பேரவை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு சங்க மாநில தலைவர் சாமிக்கண்ணு தலைமை தாங்கினார்.இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் சிவகுருபாண்டியன் சங்க கொடியை ஏற்றி வைத்தார். ஏ.ஐ.டி.யூ.சி மாவட்ட செயலாளர் ரவி வரவேற்றார்.மாநில செயலாளர் கிருஷ்ணன் அஞ்சலி தீர்மானம் வாசித்தார். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தை தனியார் மயமாக்குதலுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.இதில் ஏ.ஐ.டி.யூ.சி. சங்கத்தினர் மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் கலந்து கொண்டனர்.