ஓசூரில் 29 பஸ்களில் 'ஏர்ஹாரன்'கள் பறிமுதல்
ஓசூரில் 29 பஸ்களில் ‘ஏர்ஹாரன்’கள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஓசூர்:
ஓசூர் வட்டார போக்குவரத்து அலுவலர் துரைசாமி தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர் மணிமாறன், ஓசூர் பஸ் நிலையத்தில் நேற்று தணிக்கை மேற்கொண்டார். அப்போது அதிக ஒலி எழுப்பும் ஏர்ஹாரன்கள் பயன்படுத்தப்படுகிறதா? என 51 பஸ்களில் சோதனை நடத்தினர். இதில் 29 பஸ்களில் அதிக ஒலி எழுப்பும் ஒலிப்பான்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு அவை அகற்றப்பட்டன.