சிவந்தியப்பர் கோவிலில் ஐப்பசி விசு திருவிழா கொடியேற்றம்

விக்கிரமசிங்கபுரம் சிவந்தியப்பர் கோவிலில் ஐப்பசி விசு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

Update: 2023-10-09 21:25 GMT

விக்கிரமசிங்கபுரம்:

விக்கிரமசிங்கபுரம் வழியடிமை கொண்ட நாயகி உடனுறை சிவந்தியப்பர் கோவிலில் ஐப்பசி விசு திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி, சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை நடந்தது. பின்னர் கொடிமரத்துக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து கொடியேற்றம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

வருகிற 18-ந்தேதி வரை 10 நாட்கள் தொடர்ந்து விழா நடக்கிறது. விழா நாட்களில் தினமும் காலை மற்றும் மாலை சுவாமி, அம்பாள் வீதி உலாவும், காலை 10.30 மணிக்கு அலங்கார தீபாராதனையும் நடைபெறுகிறது. 8-ம் திருநாளான வருகிற 16-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 8 மணிக்கு நடராஜர் வெள்ளை சாத்தி புறப்பாடும், மாலை 3 மணிக்கு பச்சை சாத்தி புறப்பாடும் நடைபெறுகிறது. 10-ம் திருநாளான 18-ந் தேதி (புதன்கிழமை) காலை 6 மணிக்கு சுவாமி, அம்பாள் பூம்பல்லக்கில் வீதி உலாவும், மதியம் 12.30 மணிக்கு பாபநாசத்தில் ஐப்பசி விசு தீர்த்தவாரி நிகழ்ச்சியும் நடக்கிறது. விழாவின் ஒவ்வொரு நாளும் பல்வேறு சமுதாயம் சார்பில் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை செயலாளர் போத்திசெல்வி, தக்கார் ராம்குமார், ஆய்வாளர் கோமதி மற்றும் நிர்வாகத்தினர், சமுதாய நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்