சீவலப்பேரி காசி விஸ்வநாதர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாணம்

சீவலப்பேரி காசி விஸ்வநாதர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண விழா நடந்தது.

Update: 2022-10-23 19:12 GMT

நெல்லை சீவலப்பேரி காசி விஸ்வநாதர்- விசாலாட்சி அம்பாள் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாணம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு சீவலப்பேரியில் அமைந்துள்ள இரட்டை விநாயகர் கோவிலுக்கு விசாலாட்சி அம்பாள் புறப்பட்டு சென்றார். அங்கு சுவாமி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி அம்பாளை அழைப்பதற்காக ரதவீதிகள் வழியாக இரட்டை விநாயகர் கோவிலுக்கு சென்றார். அங்கு அம்பாளுக்கு தபசு காட்சி அளித்து மாலை மாற்றும் வைபவம் நடந்தது. அதனை தொடர்ந்து சுவாமியும், அம்பாளும் முக்கிய ரதவீதிகள் வழியாக சென்று கோவிலை அடைந்தனர்.

பின்னர் கணபதி ஹோமம் மற்றும் சிறப்பு பூைஜகளை தொடர்ந்து காசி விஸ்வநாதர், விசாலாட்சி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், கும்ப அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து உற்சவ மூர்த்திகளான சுவாமி- அம்பாள் அலங்கரிக்கப்பட்டு திருக்கல்யாணம் நடைபெற்றது. சுமார் 45 வருடங்களுக்கு பிறகு இந்த ஆண்டு திருக்கல்யாணம் நடந்தது குறிப்பிடத்தக்கது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தாிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்