75 ஆயிரம் கோழிகளுக்கு தடுப்பூசி போட இலக்கு
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 75 ஆயிரம் கோழிகளுக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் கால்நடை பராமரிப்புத்துறை மூலம் பிப்ரவரி மாதத்தில் 2 வாரம் முகாம் நடத்தி நகரம், கிராமம் மற்றும் குக்கிராமங்களில் உள்ள அனைத்து இடங்களிலும் கோழிகளுக்கு தடுப்பூசி பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டிலும் 57,000 கோழிகளுக்கு தடுப்பூசி பணி மேற்கொள்ள இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக வருகிற 15-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை இரண்டு வாரங்கள் ராணிபேட்டை மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறை மூலம் தடுப்பூசிப் பணி மேற்கொள்ளப்பட இருக்கிறது. கோழிகள் வளர்க்கும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அருகில் உள்ள கால்நடை நிலையங்களுக்கு சென்று அங்கு நடைபெறும் முகாம்களில் கோழிகளுக்கு தொற்றுநோய் பரவாமமலிருக்க தடுப்பூசி போட்டுக் கொண்டு பயன் பெறலாம்.
இந்த தகவலை மாவட்ட கலெக்டர் வளர்மதி தெரிவித்துள்ளார்.