இளையான்குடி
இளையான்குடியில் நாட்டு நலப்பணி திட்டம் சார்பாக "உலக எய்ட்ஸ் தினம்" முன்னிட்டு சமத்துவம் என்னும் தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி துணை முதல்வர் ஜஹாங்கீர் தலைமையேற்று உரை நிகழ்த்தினார். மேலும் எய்ட்ஸ் நோயாளிகளிடம் ஏற்றத்தாழ்வு இன்றி சமத்துவத்துடன் உதவி புரிய வலியுறுத்தி பேசினார். நிகழ்வில் மாணவ - மாணவிகள் சமத்துவம் என்னும் தலைப்பில் எய்ட்ஸ் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாட்டினை நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் அஸ்மத்து பாத்திமா, பீர் முகம்மது, அப்ரோஸ் ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.