எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்ட ஊழியர்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணிபுரிந்தனர்
எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்ட ஊழியர்கள் கோரிக்கை அட்டையை அணிந்து பணிபுரிந்தனர்.
தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தின் கீழ் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு நிறுவனம் அறிவித்துள்ள 10 சதவீதம் ஊதிய மாற்றம் இன்னும் அமல்படுத்தப்படவில்லை. இதனை கண்டித்தும், சுகாதாரத்துறையினரை கவனத்தை ஈர்க்கும் வகையில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தின் கீழ் பணிபுரியும் ஊழியர்கள் தங்களுக்கும் பாரபட்சமின்றி தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு நிறுவனம் அறிவித்துள்ள 10 சதவீத ஊதிய மாற்றத்தை அமல்படுத்திட வலியுறுத்தி கோரிக்கை அட்டை அணிந்து பணிபுரிந்தனர். இதில் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அனைத்து ஊழியர் நலச்சங்கத்தை சேர்ந்தவர்களும் கோரிக்கை அட்டை அணிந்து பணிபுரிந்தனர்.