தஞ்சை மாவட்டத்தில் புதுமைப்பெண் திட்டத்தில் 2-ம் கட்டமாக 2,473 மாணவிகளுக்கு உதவித்தொகை

தஞ்சாவூர் மாவட்டத்தில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு புதுமைப் பெண் திட்டத்தில் 2-ம் கட்டமாக 2,473 மாணவிகள் கல்வி உதவித்தொகை பெறுகின்றனர்.

Update: 2023-02-08 19:37 GMT

தஞ்சாவூர் மாவட்டத்தில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு புதுமைப் பெண் திட்டத்தில் 2-ம் கட்டமாக 2,473 மாணவிகள் கல்வி உதவித்தொகை பெறுகின்றனர்.

புதுமைப்பெண் திட்டம்

உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 கல்வி உதவித்தொகை வழங்கும் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு புதுமைப் பெண் திட்டத்தின் 2-ம் கட்டமாக தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் திருவள்ளூர் மாவட்டம், பட்டாபிராம் இந்துக் கல்லூரியில் நேற்று தொடங்கி வைத்தார்.இந்த விழா தஞ்சாவூர் அன்னை வேளாங்கண்ணி கலை, அறிவியல் கல்லூரியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

கல்வி உதவித்தொகை

இதைத் தொடர்ந்து, 500 மாணவிகளுக்கு கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கல்வி உதவித்தொகை வழங்கினார்.இவர்களுக்கு தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கணக்கிலிருந்து கல்வி உதவித்தொகை பெற்றுக் கொள்வதற்காக ஏ.டி.எம்.கார்டு, புதுமைப் பெண் திட்டம் தொடர்பான வழிகாட்டி கையேடு ஆகியவற்றை வழங்கினார்.மேலும் மாவட்டத்தில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு புதுமைப் பெண் திட்டத்தில் முதல் கட்டமாக 5,093 மாணவிகள் பயனடைந்து உள்ளனர். இதைத்தொடர்ந்து, 2-ம் கட்டமாக 2,473 மாணவிகள் முதல் தவணையாகப் பயனடைகின்றனர் எனவும் தெரிவித்தார். விழாவில், மேயர் சண். ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவக்குமார், மாவட்டச் சமூக நல அலுவலர் ராஜேஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்