அதிமுகவில் பணம் மட்டும்தான் உள்ளது; கொள்கை கிடையாது - சீமான்

அதிமுகவில் பணம் மட்டும்தான் உள்ளது, கொள்கை கிடையாது என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

Update: 2022-07-03 11:29 GMT

சென்னை,

மத்திய அரசின் 'அக்னி பத்' திட்டத்தை கைவிடக்கோரி நாம் தமிழர் கட்சியின் சார்பில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஆர்ப்பாட்டத்திற்கு பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர் கூறியதாவது:-

அதிமுகவில் நடப்பது சொந்தகட்சி பிரச்சினை. இதில் எந்த சார்பு நிலையும் நாங்கள் எடுக்கமுடியாது. நாங்கள் எடப்பாடி பழனிசாமியை ஆதரிப்பதாலோ அல்லது ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரிப்பதாலோ எங்களுக்கு என்ன பலன் இருக்கப்போகிறது?

நாங்கள் அக்கட்சியின் செயற்குழு உறுப்பினரோ, பொதுக்குழு உறுப்பினரோ கிடையாது. இது அவர்கள் கட்சி பிரச்சினை, அவர்கள் பேசி தீர்த்துகொள்ள வேண்டும். அதில் சிலர் இந்தப்பக்கம் இருப்பார்கள், சிலர் அந்தப்பக்கம் இருப்பார்கள். நாங்களும் அந்த பிரச்சினையை கவனித்துக்கொண்டு, வேடிக்கைப் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறோம். அதில் எங்களுக்கு எந்த கருத்தும் இல்லை.

அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களை விலைகொடுத்து வாங்குவதற்கு வாய்ப்பு உள்ளது. அவர்களிடம் பணம் மட்டும் தான் உள்ளது. வேறு என்ன இருக்கிறது? கோடிகள் பல இருக்கிறது, கொள்கை கிடையாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்