அதிமுக அலுவலகம் சூறையாடப்பட்ட வழக்கு - விசாரணையை தொடங்கிய சிபிசிஐடி

அதிமுக தலைமை அலுவலகம் சூறையாடப்பட்ட வழக்கில் சிபிசிஐடி இன்று நேரடி விசாரணையை தொடங்கியுள்ளது.

Update: 2022-09-07 04:28 GMT

சென்னை:


Full View

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகம் சூறையாடப்பட்ட வழக்கில் சிபிசிஐடி இன்று நேரடி விசாரணையை தொடங்கியுள்ளது.

விசாரணையை துரிதப்படுத்த டிஜிபிக்கு உத்தரவிடமாறு சி.வி.சண்முகம் வழக்கு தொடர்ந்த நிலையில் சிபிசிஐடி போலீசார் நேரில் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

அதிமுக தலைமை அலுவலகத்துக்கு நேரில் சென்றுள்ள சிபிசிஐடி டிஎஸ்பிக்கள் ராஜா பூபதி, வெங்கடேசன் ஆகியோர் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், அதிமுக தலைமை அலுவலகத்தில் சிபிசிஐடி அதிகாரிகளின் விசாரணையை எம்பி சி.வி.சண்முகம் நேரில் பார்வையிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்