அ.தி.மு.க. செயல்படாமல் இருக்க எல்லா வேலைகளையும் செய்துவிட்டு எனக்கு கடிதம் அனுப்புவதா? - எடப்பாடி பழனிசாமி பதில் கடிதம்

உள்ளாட்சி இடைத்தேர்தல் தொடர்பாக எனக்கு எழுதிய கடிதம் ஏற்புடையதல்ல என்று ஓபிஎஸ்க்கு எடப்பாடி பழனிசாமி பதில் கடிதம் எழுதியுள்ளார்.

Update: 2022-06-30 09:31 GMT

சென்னை,

அதிமுகவில் ஒற்றைத்தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. ஒ.பன்னீர் செல்வம் - எடப்பாடி பழனிசாமி தரப்பு இடையே கடந்த சில நாட்களாக காரசாரமாக கருத்து மோதல் நடைபெற்று வருகிறது. இந்த பரபரப்புக்கு மத்தியில் எடப்பாடி பழனிசாமிக்கு ஓ.பன்னீர் செல்வம் நேற்று கடிதம் எழுதியிருந்தார். அதில், உள்ளாட்சி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்களுக்கு சின்னம் வழங்க கையெழுத்து போட நான் தயார் என்று ஓ.பன்னீர் செல்வம் கூறியிருந்தார். இந்தக் கடிதத்தை எடப்பாடி பழனிசாமி ஏற்க மறுத்ததாக தகவல்கள் வெளியானது.

இந்த நிலையில், ஓ.பன்னீர் செல்வத்திற்கு இன்று எடப்பாடி பழனிசாமி பரபரப்பு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், "அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்ற உணர்வில் நீங்கள் எழுதிய கடிதம் செல்லத்தக்கதல்ல. கடந்த 27ஆம் தேதி நடைபெற்ற அதிமுக தலைமை கழக நிர்வாகிகள் கூட்டத்தை புறக்கணித்தது ஏன்? உள்ளாட்சி இடைத்தேர்தல் தொடர்பாக எனக்கு எழுதிய கடிதம் ஏற்புடையதல்ல. பொதுக்குழுவில் சட்டத்திருத்தங்கள் அங்கீகரிக்கப்படாததால் ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியாகிவிட்டது" எனத் தெரிவித்துள்ளார்.'



Tags:    

மேலும் செய்திகள்