அதிமுக ஐ.டி. பிரிவினருடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

நாடாளுமன்ற தேர்தல் பணிகள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பது தொடர்பாக நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

Update: 2024-01-03 06:04 GMT

சென்னை,

சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு ஆலோசனை கூட்டம் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இன்னும் 3 மாதங்களில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் சமூக வலைதள செயல்பாடுகள், தேர்தலுக்கு முன்பாக தேர்தல் பணிகள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பது தொடர்பாக நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

10 ஆண்டு கால அதிமுக ஆட்சி காலத்தில் செய்யப்பட்ட சாதனைகள், நலத்திட்டங்களை மக்களிடம் எடுத்துரைக்க வேண்டும் என்றும், தேர்தலில் திமுக அரசு நிறைவேற்றாத வாக்குறுதிகளை மக்களிடம் எடுத்துரைக்க வேண்டும் எனவும் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தி உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்