அதிமுக செயற்குழு கூட்டம் வரும் 7ம் தேதி நடைபெறும்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

வரும் 7 ஆம் தேதி அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

Update: 2023-04-03 14:02 GMT

சென்னை,

அதிமுகவில் பல்வேறு சவால்களைக் கடந்து அக்கட்சியின் பொதுசெயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக பொறுப்பேற்றது முதலே கட்சி நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறார்.

உறுப்பினர் சேர்க்கை தொடர்பான அறிக்கையும் பொறுப்பெற்ற உடனேயே அறிவித்தார். இதையடுத்து, வரும் 7 ஆம் தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்ட நடைபெறும் என்று கட்சித்தலைமை அறிவித்தது.

இந்த நிலையில், வரும் 7 ஆம் தேதி அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இந்தக் கூட்டம் மதியம் 12 மணிக்கு நடைபெறுகிறது.

 

Tags:    

மேலும் செய்திகள்