பூலித்தேவன் சிலைக்கு அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மரியாதை - எதிர்ப்பு தெரிவித்து தம்பதியினர் கோஷம்..!

307-வது பிறந்தநாளையொட்டி பூலித்தேவன் முழு உருவ வெண்கல சிலைக்கு தமிழக அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

Update: 2022-09-01 09:43 GMT

தென்காசி,

சுதந்திர போராட்ட வீரர் மாமன்னர் பூலித்தேவன் 307-வது பிறந்தநாள் விழா இன்று (வியாழக்கிழமை) கொண்டாடப்பட்டு வருகிறது. விழாவையொட்டி பூலித்தேவன் சிலைக்கு தமிழக அரசு சார்பிலும், பல்வேறு அரசியல் கட்சிகள், இயக்கங்கள் சார்பிலும் மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், பூலித்தேவன் பிறந்தநாளையொட்டி தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே நெற்கட்டும் செவலில் நினைவு மாளிகையில் உள்ள பூலித்தேவன் முழு உருவ வெண்கல சிலைக்கு அதிமுக முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், ஆர்.பி.உதயகுமார், கடம்பூர் ராஜூ ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அப்போது தகுதி இல்லாதவர் பூலித்தேவனுக்கு மாலை அணிவிக்க கூடாது என முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், ஆர்.பி.உதயகுமாருக்கு எதிராக எதிர்ப்பு தெரிவித்து தம்பதியினர் கோஷம் எழுப்பினர். கோஷமிட்ட இருவர்களை அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்றுதான் கோஷமிட்டதாக தம்பதி விளக்கம் அளித்ததாக கூறப்படுகிறது.

பூலித்தேவன் சிலைக்கு மரியாதை செலுத்த வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், ஆர்.பி.உதயகுமாருக்கு எதிராக தம்பதியினர் கோஷம் எழுப்பியது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்