மயிலம் ஒன்றியத்தில்அ.தி.மு.க. ஆலோசனை கூட்டம்சி.வி. சண்முகம் எம்.பி. பங்கேற்பு
மயிலம் ஒன்றியத்தில் அ.தி.மு.க. ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் சி.வி. சண்முகம் எம்.பி. பங்கேற்றாா்.
மயிலம்,
அ.தி.மு.க. சார்பில் மயிலம் ஒன்றியத்தில் பூத் கமிட்டி அமைப்பதற்கான ஆலோசனை கூட்டம் கொல்லியங்குளத்தில் சுந்தர விநாயகர் கோவில் அருகில் நடைபெற்றது. இதற்கு மயிலம் கிழக்கு ஒன்றிய செயலாளர் டி.டி. சேகரன் தலைமை தாங்கினார். திண்டிவனம் எம்.எல்.ஏ. அர்ச்சுனன், இளம்பெண் பாசறை மாவட்ட செயலாளர் ஜெயபிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மயிலம் ஒன்றிய பொருளாளர் சிவஞானம், கிளை பிரதிநிதி விஜயன் ஆகியோர் வரவேற்றனர்.
கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் எம்.பி. சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு வருகிற நாடாளுமன்ற தேர்தலுக்கான பூத் கமிட்டி முகவர்கள் அமைப்பது, கட்சி உறுப்பினர்கள் சேர்த்தல் உள்ளிட்ட பல்வேறு ஆலோசனை வழங்கி பேசினார்.
இதேபோன்று மயிலம் ஒன்றியத்தில் வீடூர், கணபதிபட்டு, பாதிராப்புலியூர், கூட்டேரிப்பட்டு, சின்ன நெற்குணம், செண்டூர், விளங்கம்பாடி, தெண்ணால பாக்கம் ஆகிய ஊராட்சிகளில் அ.தி.மு.க. ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதில், வீடூர் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் கங்காதுரை, கொல்லியங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் ஜோதிலட்சுமி வர்ணமுத்து, கிளை செயலாளர் சதீஷ் சரவணன், ஒன்றிய கிளை இளம் பெண் பாசறை நிர்வாகிகள் என்று பலரும் கலந்து கொண்டனர்.