சுதந்திர தின விழாவை முன்னிட்டு செங்கல்பட்டு ரெயில் நிலையத்தில் போலீசார் தீவிர சோதனை

சுதந்திர தின விழாவை முன்னிட்டு செங்கல்பட்டு ரெயில் நிலையத்தில் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2022-08-14 09:38 GMT

செங்கல்பட்டு,

இந்திய நாட்டின் 75வது சுதந்திர தின விழா நாளை கோலாகலமாக கொண்டாடப்படுகின்றன. இதையொட்டி நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்த மத்திய-மாநில அரசுகள் உத்தரவிட்டுள்ளன. இந்நிலையில் இன்று செங்கல்பட்டு மாவட்டத்திலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு ரெயில் நிலைய வளாகம் முழுவதும் ரெயில்வே போலீசாரும், ரெயில்வே பாதுகாப்பு படையினரும் இணைந்து தீவிர சோதனையில் ஈடுபட்டனா். இதில் விரைவு மற்றும் மின்சார ரெயில்கள் தண்டவாளங்கள், நடைமேடைகள், பாா்சல் அலுவலகம், பயணிகள் தங்கும் அறை ஆகியவற்றில் மோப்பநாய் மற்றும் வெடிகுண்டு கண்டறியும் நவீன இயந்திரங்களைக் கொண்டு சோதனை செய்தனா்.

ரெயில் நிலையத்திற்குள் வந்த பயணிகளின் உடமைகள் அனைத்தும் மெட்டல் டிடெக்டா் கொண்டு சோதனை செய்யப்பட்டது. மேலும் அசம்பாவிதங்கள் ஏதேனும் ஏற்படாமல் தடுக்க ரெயில்வே பாதுகாப்பு படையினர் ஏராளமானோர் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்