சுதந்திர தினத்தை முன்னிட்டு கடலூர் முதுநகர் ரெயில் நிலையத்தில் போலீசார் தீவிர சோதனை

சுதந்திர தினத்தை முன்னிட்டு கடலூர் முதுநகர் ரெயில் நிலையத்தில் போலீசார் தீவிர சோதனை நடத்தினர்.

Update: 2023-08-12 18:45 GMT

கடலூர் முதுநகர், 

நாடு முழுவதும் சுதந்திர தின விழா நாளை மறுநாள்(செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி பொதுமக்கள் அதிக அளவில் கூடும் இடங்களான வழிபாட்டு தலங்கள், பஸ், ரெயில் நிலையங்களில் பாதுகாப்பு பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் கடலூர் மாவட்டத்திலும் எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தநிலையில் திருச்சி ரெயில்வே பாதுகாப்பு படை கண்காணிப்பாளர் செந்தில்குமார் உத்தரவின் பேரில், கடலூர் துறைமுகம் இருப்பு பாதை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சேகர், ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சகாயம் மற்றும் போலீசார் கடலூர் முதுநகர் ரெயில் நிலையத்தில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ரெயிலில் சோதனை

இவர்கள் ரெயில் நிலைய நுழைவு வாயில் அருகில், பயணிகள் கொண்டு வரும் உடைமைகளை மெட்டல் டிடெக்டர் கருவியின் மூலம் சோதனை செய்த பின்னரே ரெயில் நிலையத்திற்குள் கொண்டு செல்ல அனுமதித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று காலையில் சென்னையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏறிய போலீசார், அதில் சந்தேகப்படும்படியான நபர்கள் யாரேனும் உள்ளார்களா? எனவும், பயணிகளின் உடைமைகளையும் சோதனை செய்தனர்.

ரெயில் தண்டவாளங்கள், பாலங்கள், ரெயில் நிலைய அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களிலும் மெட்டல் டிடெக்டர் மூலம் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்