விவசாயம் செழித்திட வேண்டிசீனிவாச பெருமாள் கோவிலில் திருக்கல்யாணம்

விவசாயம் செழித்திட வேண்டி, போடி சீனிவாச பெருமாள் கோவிலில் திருக்கல்யாணம் நடந்தது.

Update: 2022-12-25 18:45 GMT

விவசாயம் செழித்திட வேண்டி, போடி சீனிவாச பெருமாள் கோவிலில் திருக்கல்யாணம் நடந்தது. இதையொட்டி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் சுவாமி அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதையடுத்து சுவாமிக்கு கல்யாண சீர் வரிசை எடுத்தல், பூனூல், மாலை மாற்றுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. பின்னர் பெருமாளுடன், ஸ்ரீதேவி-பூதேவியருக்கு திருக்கல்யாணம் நடந்தது. இதையடுத்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்