பனப்பாக்கத்தில் விவசாயிகளுக்கு மானியத்தில் கறவை மாடுகள் வேளாண்மை அதிகாரிகள் வழங்கினர்

பனப்பாக்கத்தில் விவசாயிகளுக்கு மானியத்தில் கறவை மாடுகளை வேளாண்மை அதிகாரிகள் வழங்கினர்.

Update: 2023-08-10 18:45 GMT

நெல்லிக்குப்பம், 

தேசிய நீடித்த நிலையான வேளாண்மை இயக்கத்தின் கீழ் ஒருங்கிணைந்த பண்ணையம் நிகழ்ச்சி அண்ணாகிராமம் அடுத்த பனப்பாக்கம் கிராமத்தில் நடைபெற்றது. இதற்கு ஊராட்சி மன்ற தலைவர் விஜயலட்சுமி செல்வராஜ் தலைமை தாங்கினார். அண்ணாகிராமம் வேளாண்மை உதவி இயக்குனர் சுரேஷ், கால்நடை மருத்துவர் முருகவேணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் கண்ணையா, வேளாண்மை துணை இயக்குனர் கென்னடி ஜெபக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு 20 விவசாயிகளுக்கு மானியத்தில் கறவை மாடுகள் வழங்கினர். மேலும் பயிர் உளுந்து சாகுபடிக்கான இடுபொருட்கள் 50 சதவீத மானியத்திலும், கறவை மாடுகளுக்கு காப்பீடு செய்வதற்கான அடையாள வில்லையும் வழங்கினர்.

இதில் வேளாண்மை துறை அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை புதுப்பேட்டை துணை வேளாண்மை அலுவலர் தனசேகர், பகுதி உதவி வேளாண்மை அலுவலர் ராமதாஸ் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்