வேளாண்மை அலுவலர் மயங்கி விழுந்து சாவு

கோவில்பட்டியில் வேளாண்மை அலுவலர் திடீரென மயங்கி விழுந்து இறந்து போனார்.

Update: 2023-01-11 18:45 GMT

கோவில்பட்டி:

கோவில்பட்டி அடுத்துள்ள தெற்கு திட்டங்குளம் நடுத்தெருவை சேர்ந்த பாலையா மகன் மகேந்திர குமார் (வயது 42). இவர் இங்கு உள்ள வேளாண்மை அலுவலகத்தில், உதவி வேளாண்மை அலுவலராக பணி செய்து வந்தார். சம்பவத்தன்று பசுவந்தனை ரோட்டில் இருந்து கோவில்பட்டி நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் திடீரென்று மயங்கி மோட்டார் சைக்கிளுடன் விழுந்துள்ளார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இது தொடர்பாக மேற்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்