வேளாண்மை அதிகாரி ஆய்வு
வாசுதேவநல்லூர் யூனியனில் வேளாண்மை அதிகாரி ஆய்வு செய்தார்.
வாசுதேவநல்லூர்:
வேளாண்மை உழவர் நலத்துறை, தோட்டக்கலை துறை மூலமாக கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தில் தரிசு நிலங்களை விளைநிலங்களாக மாற்ற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதையொட்டி வாசுதேவநல்லூர் யூனியன் ராமசாமியாபுரத்தில் தரிசு நில தொகுப்புகளை தோட்டக்கலைத்துறை இயக்குனர் பிருந்தாதேவி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ராமசாமியாபுரம் பஞ்சாயத்து தலைவர் அந்தோணியம்மாள், தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் ஜெயபாரதி மாலதி, வேளாண்மை இணை இயக்குனர் தமிழ் மலர், செயற்பொறியாளர் பாலாஜி, உதவி செயற்பொறியாளர் சங்கர், வேளாண்மை உதவி இயக்குனர் இளஞ்செழியன், தோட்டக்கலை உதவி இயக்குனர் ராஜா, தோட்டக்கலை அலுவலர் விவேக் பத்மநாபன், உதவி பொறியாளர் மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.