ஏரியில் மண் எடுப்பதால் விவசாயம் பாதிப்பு

செய்யாறு அருகே ஏரியில் மண் எடுப்பதால் விவசாயம் பாதிக்கப்படுவதால், மண் எடுப்பதை தடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2022-12-20 17:25 GMT

செய்யாறு அருகே ஏரியில் மண் எடுப்பதால் விவசாயம் பாதிக்கப்படுவதால், மண் எடுப்பதை தடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஏரி மண்

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பாண்டியம்பாக்கம் கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயக் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். சுமார் 100 ஏக்கரில், பாண்டியம்பாக்கம் ஏரி நீர் பாசனத்தை நம்பியே விவசாயம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் பாண்டியம் பாக்கம் ஏரியில் இருந்து தினந்தோறும் லாரியில், பொக்லைன் எந்திரம் மூலம் மண் அள்ளி செல்கின்றனர்.

கடந்த நவம்பர் மாதம் முதல் ஏரி மண்ணை பொக்லைன் எந்திரம் மூலம் ஆழமாகத் தோண்டி லாரியில் அதிகப்படியாக ஏற்றி சென்றதால் சாலையில் ஆங்காங்கே பெரிய பள்ளங்களாக காட்சியளிக்கிறது. நாளுக்கு நாள் ஏரியில் மண் எடுப்பது அதிகரித்து வருவதால் அப்பகுதி விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

தடுக்க வேண்டும்

ஏரியை நம்பியே விவசாயம் செய்யும் கிராம விவசாயிகள், தினமும் லாரிகளில் மண் அள்ளி செல்வதை தடுத்திட அப்பகுதிக்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதற்கு அங்கிருந்த மேற்பார்வையாளர் ஒருவர் முறையாக அனுமதி பெற்று தான் ஏரி மண் அள்ளி செல்கின்றோம் எனவும், இங்கு அள்ளப்படும் ஏரி மண் நெடுஞ்சாலைத்துறை சார்பில் காஞ்சிபுரம் - வாலாஜா வரை ஆங்காங்கே நடக்கும் மேம்பாலம் அமைக்கும் பணிக்கு பயன்படுத்தி வருகிறோம் எனவும் தெரிவித்துள்ளார்.

ஏரியில் மண் அள்ளப்படுவதால் நிலத்தடி நீர் பாதிப்பதோடு விவசாயம் பெரிதும் பாதிக்கும். எங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி விடும் எனவும், ஏரியில் மண் அள்ளப்படுவதை தடுத்திட வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்