வேளாண்மை கல்லூரி மாணவிகள் முகாம்
கீழப்பாவூர் வட்டாரத்தில் வேளாண்மை கல்லூரி மாணவிகள் முகாமிட்டு மேற்கொண்டு வருகின்றனர்.
பாவூர்சத்திரம்:
கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய இறுதியாண்டு மாணவிகள் கீழப்பாவூர் வட்டாரத்தில் கிராமப்புற பணி அனுபவ திட்டம் மேற்கொண்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக கீழப்பாவூரில், இயற்கை விவசாயம் மேற்கொண்டு வரும் விவசாயிகளிடம் பஞ்ச காவியம், மீன் கரைசல், மீன் அமினோ அமிலம் ஆகியவை குறித்து செயல்முறை விளக்கம் செய்து காட்டினர். இவற்றை இயற்கை பொருட்களான பால், தயிர், சாணம், கோமியம், நாட்டுச்சக்கரை, மோர் ஆகியவை கொண்டு எப்படி தயாரிப்பது என்பது குறித்தும் விளக்கினர்.