வன விலங்குகளால் விவசாயம் பாதிப்பு

வன விலங்குகளால் விவசாயம் பாதிக்கப்படுகிறது.

Update: 2023-01-09 20:04 GMT

விக்கிரமங்கலம்

அரியலூர் மாவட்டம், தா.பழூர் ஒன்றியம் விக்கிரமங்கலம் அருகே உள்ள அரச நிலையிட்டபுரம், மழவராயநல்லூர், கோவில் சீமை, கடம்பூர், அரக்கட்டளை உள்ளிட்ட பகுதிகளில் விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளது. இப்பகுதியில் உள்ள விவசாயிகள் தங்களது நிலங்களில் சோளம், எள், கடலை, கத்தரி, தக்காளி போன்றவற்றை சாகுபடி செய்து வந்தனர்.

ஆனால் சில ஆண்டுகளாக இந்த பயிர்களை தங்களது நிலத்தில் பயிர் செய்ய முடியாமல் பாதிப்படைந்துள்ளனர். இதற்கு முக்கிய காரணமாக அப்பகுதிகளில் உள்ள குரங்கு, காட்டுப்பன்றி, மான், நரி போன்ற வனவிலங்குகளால்தான் என்று விவசாயிகள் கூறுகின்றனர். அதாவது அரசநிலையிட்டபுரம், மழவராயநல்லூர், கோவில் சீமை, கடம்பூர், அரக்கட்டளை போன்ற கிராமங்கள் வழியாக மருதையாறு செல்கிறது. இதில் அரசநிலையிட்டபுரத்தில் இருந்து வைப்பூர் கிராமம் வரை செல்லும் சுமார் 8 கிலோ மீட்டர் தூரம் உள்ள மருதையாற்றின் இருகரைகளிலும் மற்றும் உட்பகுதியிலும் சீமை கருவேல மரங்கள் வளர்ந்து, அடர்ந்த காடு போல் காட்சியளிக்கிறது. கருவேல மரங்கள் அடர்ந்த புதர்களுக்குள் வனவிலங்குகள் பதுங்கியுள்ளன. எனவே வன விலங்குகளை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என்பது இப்பகுதி விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்