விவசாய தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்
திருவாடனையில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில்ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தொண்டி,
திருவாடனையில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தாலுகா தலைவர் அருள்சாமி தலைமை தாங்கினார். மாநில துணை தலைவர் சங்கர், மாவட்ட தலைவர் கலையரசன், தாலுகா செயலாளர் சேதுராமன், பொருளாளர் நாகநாதன், தமிழ்நாடு விவசாய சங்க மாநில துணைத்தலைவர் முத்துராமு ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். ஆர்ப்பாட்டத்தில் கல்லூர், திருவிடைமிதியூர், ஊராட்சி மற்றும் தோட்டாமங்கலம், ஆதியூர், ஆண்டிவயல் கிராமங்களுக்கு உடனடியாக குடிநீர் வழங்கிட வேண்டும், காவிரி குடிநீர் திட்டம் அனைத்து கிராமங்களுக்கும் விரிவுப்படுத்த வேண்டும், திருவாடானை தாலுகாவில் அனைத்து ஊராட்சிகளிலும் 100 நாள் வேலை அட்டை பெற்றுள்ள அனைவருக்கும் வேலை வழங்கி ரூ.292 முழுமையான கூலி வழங்கிட வேண்டும், மாத ஓய்வூதியம் கேட்டு மனு கொடுத்துள்ள அனைவருக்கும் உதவித்தொகை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். தொடர்ந்து வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரமோகனை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.