விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
100 நாள் வேலை திட்டத்தை முறைப்படுத்தக்கோரி விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் சேதுபாவாசத்திரம் அருகே பூக்கொல்லை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் சேகர் தலைமை தாங்கினார். ஒன்றிய தலைவர் இளங்கோவன் முன்னிலை வகித்தார். சி.ஐ.டி.யூ. கவுரவ தலைவர் மனோகரன், விவசாயிகள் சங்க ஒன்றிய துணை செயலாளர் வேலுச்சாமி, விவசாயிகள் சங்க மாவட்டக்குழு உறுப்பினர் கருப்பையா ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இதில் 100 நாள் வேலையை 200 நாட்களாக உயர்த்தி வழங்க வேண்டும். கூலி 294-ஐ முழுமையாக வழங்க வேண்டும். உயர்ந்து வரும் விலைவாசிக்கேற்ப கூலியை 600 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும். பேரூராட்சி பகுதிகளிலும் 100 நாள் வேலையை உடனடியாக தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.