மழை நிவாரணம் வழங்கக்கோரி விவசாய தொழிலாளர்கள் சாலை மறியல்

சீர்காழி அருகே மழை நிவாரணம் வழங்கக்கோரி விவசாய தொழிலாளர்கள் சாலை மறியல் போராட்டம் நடந்தது. போலீசார்- போராட்டக்காரர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-12-14 18:45 GMT

கொள்ளிடம்:

சீர்காழி அருகே மழை நிவாரணம் வழங்கக்கோரி விவசாய தொழிலாளர்கள் சாலை மறியல் போராட்டம் நடந்தது. போலீசார்- போராட்டக்காரர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சாலை மறியல்

கன மழையால் பாதிக்கப்பட்ட விவசாய தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.10ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட வீடுகளை மீண்டும் கணக்கெடுத்து அனைவருக்கும் நிவாரணம் வழங்க வேண்டும்.பாதிக்கப்பட்ட கூரை வீடுகளுக்கு கான்கிரீட் வீடு உடனடியாக கட்டித்தர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய கூலி தொழிலாளர்கள் மற்றும் கிராமமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் மாதானம்- சீர்காழி சாலையில் பச்சை பெருமாநல்லூர் பஸ் நிறுத்தத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

வாக்குவாதம்

இதுகுறித்து தகவல் அறிந்த சீர்காழி தாசில்தார் செந்தில்குமார் சம்பவ இடத்துக்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் சாலை மறியல் போராட்டம் நீடித்தது. இதை தொடர்ந்து சீர்காழி மற்றும் கொள்ளிடம், புதுப்பட்டினம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்கள் சிலரை கைது செய்தனர்.இதனால் போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் போலீசார் வாகனத்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

போக்குவரத்து பாதிப்பு

தொடர்ந்து கைது செய்யப்பட்டவா்களை போலீசார் விடுவித்தனர். மீண்டும் அவர்கள் சாலைமறியலை தொடர்ந்தனர். இதையடுத்து சீர்காழி போலீஸ் சப்-கலெக்டர் அர்ச்சனா, கிராமமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது கோரிக்கைகள் குறித்து அரசிடம் தெரிவித்து உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் அவர்கள் மறிலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால் அந்த பகுதியில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்