விவசாய பணியில் தமிழரசி எம்.எல்.ஏ.

விவசாய பணியில் தமிழரசி எம்.எல்.ஏ. ஈடுபட்டார்.

Update: 2022-10-12 18:45 GMT

திருப்புவனம், 

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே பொட்டப்பாளையத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மானாமதுரை தி.மு.க. எம்.எல்.ஏ. தமிழரசி, கொந்தகை வழியாக காரில் சென்றார். அப்போது கண்மாய் பாசன சங்க தலைவர் சுரேஷ் என்பவரின் நிலத்தில் பெண்கள் கூலி வேலையாக நாற்று பறித்து கட்டுகளாக கட்டிக் கொண்டிருந்தனர். இதை பார்த்த தமிழரசி எம்.எல்.ஏ. காரை நிறுத்தி கீழே இறங்கி சென்று அந்த பெண்களிடம் விவசாய வேலைகள் குறித்தும், கிடைக்கும் சம்பளம் குறித்தும் விசாரித்தார். பின்னர் அவர் வயலில் இறங்கி அந்த பெண்களுடன் சேர்ந்து தானும் நாற்றுகளை பறித்து கட்டி விவசாய வேலை செய்தார். இதையடுத்து தமிழரசி எம்.எல்.ஏ. அங்கிருந்து புறப்பட்டு சென்றார். விவசாய பணியில் ஈடுபட்ட பெண் எம்.எம்.ஏ.வை விவசாயிகளும், அந்த வழியாக சென்றவர்களும் பாராட்டினர். 

Tags:    

மேலும் செய்திகள்