மானியத்தில் வேளாண்மை இடுபொருட்கள்- வேளாண்மை உதவி இயக்குனர் தகவல்

மானியத்தில் வேளாண்மை இடுபொருட்கள் விவசாயிகளுக்கு வழங்க உள்ளதாக வேளாண்மை உதவி இயக்குனர் தெரிவித்தார்

Update: 2023-06-24 20:31 GMT

பேரையூர்

சேடப்பட்டி வேளாண்மை உதவி இயக்குனர் ராமசாமி ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சேடப்பட்டி வேளாண்மை விரிவாக்க மையத்தில் விவசாயிகளுக்கு தேவையான இடுபொருட்கள் மானியத்தில் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது விசைத்தெளிப்பான், பேட்டரி தெளிப்பான், பண்ணைக் கருவிகள் தொகுப்பு (கடப்பாரை, இரும்பு தட்டு, களைகொத்தி, மண்வெட்டி, பண்ணருவா) பருத்தி, நெல், சோளம், நுண்ணூட்ட விதைகள், திரவ நுண்ணூட்ட உரங்கள் போதிய அளவில் இருப்பு உள்ளது. தேவைப்படும் விவசாயிகள் 50 சதவீத மானியத்தில் பெற்றுக் கொள்ளலாம். மேலும் நடப்பு ஆண்டில் கலைஞர் திட்டம் செயல்படுத்தப்படும் கிராமங்களான பேரையம்பட்டி, சீல்நாயக்கன்பட்டி, பாப்பிநாயக்கன்பட்டி, வண்டாரி, கேத்துவார்பட்டி, உத்தப்புரம், கிராம விவசாயிகள் தங்களுக்கு தேவைப்படும் மானிய திட்டங்களான, விதை வினியோகம், தென்னங்கன்று வினியோகம், பண்னைக் கருவிகள், விசைத்தெளிப்பான் போன்ற திட்டங்களில் பயன்பெற உழவன் செயலியினை தங்களது கைபேசியில் பதிவிறக்கம் செய்து பயனாளியாக முன்பதிவு செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறது. இயற்கை விவசாயம் செய்ய விரும்பும் சிறுதானிய விவசாயிகளுக்கு இந்தாண்டு மானியத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதால் ஆர்வமுள்ள அருகருகே நிலம் உள்ள விவசாயிகள் 50 ஏக்கர் தொகுப்பாக சேர்த்து 20 நபர்கள் இத்திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம், இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்