100 விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருட்கள்

100 விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருட்கள் வழங்கப்பட்டது,

Update: 2023-01-08 18:45 GMT

சிவகங்கை, 

சிவகங்கையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 100 விவசாயிகளுக்கு ரூ.8 லட்சத்து 81 ஆயிரம் மதிப்பீட்டில் வேளாண் இடுபொருட்களை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் வழங்கினார்.

வேளாண் இடுபொருட்கள்

சிவகங்கை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள சமுதாயக்கூடத்தில், மாநில விரிவாக்க திட்டங்களுக்கான உறுதுணை சீரமைப்பு திட்டத்தின் (அட்மா) கீழ் மரபியல் பன்முகத்தன்மை கொண்ட உயர்தர உள்ளூர் பயிர் ரகங்களை பிரபலப்படுத்துதல் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமையில் நடைபெற்றது. எம்.எல்.ஏ.க்கள் தமிழரசி ரவிக்குமார் (மானாமதுரை), மாங்குடி (காரைக்குடி) ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேளாண்மை இணை இயக்குனர் தனபாலன் வரவேற்று பேசினார்.

விழாவில் கண்காட்சியை திறந்து வைத்து கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் பேசினார். பின்னர் 100 விவசாயிகளுக்கு ரூ.8,லட்சத்து 81 ஆயிரத்து 628 மதிப்பீட்டில் வேளாண் இடுபொருட்களை அமைச்சர் வழங்கினார்.

விழாவில், செட்டிநாடு வேளாண்மைக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், முதன்மை அலுவலர் வீரமணி, குன்றக்குடி வேளாண்மை அறிவியல் நிலைய பேராசிரியர் செந்தூர்குமரன், துணைஇயக்குனர்கள் அழகுமலை (தோட்டக்கலை), சுருளிமலை (மத்தியதிட்டம்), பன்னீர்செல்வம்(மாநிலத்திட்டம்), செல்வி (நுண்ணுயிா்பாசனம்), மற்றும் தமிழ்செல்வி (வேளாண் விற்பனை மற்றும் வணிகம்), கதிரேசன் (உழவர்பயிற்சிநிலையம்), மாவட்டதுணை செயலாளர்கள் சேங்கைமாறன். மணிமுத்து உள்படபலர் கலந்து கொண்டனர்.

100 விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருட்கள்

மேலும் சிவகங்கை, பையூர்பிள்ளைவயலில் உள்ள பழமலை நகரில் நரிக்குறவர்களின் குழந்தைகளுக்காக அமைக்கப்பட்டுள்ள உண்டு, உறைவிட சிறப்பு பயிற்சி மையத்தையும் அமைச்சர் பெரியகருப்பன் திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் சிவகங்கை ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் மஞ்சுளா பாலசந்தர், சிவகங்கை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் சுவாமிநாதன், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி உதவி திட்ட அலுவலர்கள், சீத்தாலெட்சுமி, .பீட்டர்லெமாயு, ஆவின், ஊராட்சி மன்றத்தலைவர் புவனேஸ்வரி, சுரேஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்