விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண் கருவிகள்

சங்கராபுரம் அருகே விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண் கருவிகளை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் வழங்கினார்.

Update: 2023-03-03 18:45 GMT

சங்கராபுரம்

கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் சங்கராபுரம் அருகே உள்ள செம்பராம்பட்டு கிராமத்தில் நடக்கும் பணிகளை கள்ளக்குறிச்சி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் கருணாநிதி ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் வேளாண்மை அலுவலர்களிடம், சங்கராபுரம் வட்டாரத்தில் 11 கிராமங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.

அதனை தொடர்ந்து கலைஞரின் ஒருங்கிணைந்த அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்டத்தின் மூலம் 300 பயனாளிகளுக்கு இலவசமாக தென்னங்கன்றுகளையும், 20 விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண் கருவிகளும், 10 பேருக்கு தார் பாயும் வழங்கினார்.

இதில் சங்கராபுரம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் புஷ்பராணி, துணை வேளாண்மை அலுவலர் காசி, உதவி விதை அலுவலர்கள் முருகேசன், துரை, உதவி வேளாண்மை அலுவலர்கள் பழனிவேல், முகமதுநாசர், வெங்கடேசன், அட்மா தொழில்நுட்ப மேலாளர் மவிசுதா, உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் அருண்குமார், லோகபிரியா, ஊராட்சி மன்ற தலைவர் வைத்தியநாதன் மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்